இறைதூதர் காலத்து மதீனா சமூகம் – பாகம் 01
(அதன் தன்மைகளும் அமைப்பும்)
பேராசிரியர் அக்ரம் ளியா அல்-தீன் அல்-உமர் அவர்களின் “இறை தூதர் காலத்து மதீன சமூகம் பாகம் 1” – அதன் தன்மைகளும் அமைப்பும் எனும் நூலை வாசகர்கள் முன் வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். அறபு மூலத்தில் المجتمع المدني في عهد النبوة எனும் தலைப்பில் இரண்டு பகங்களாக வெளிவந்தது மூல நூல்.
மூல நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான அரபு மூல ஆதார நூல்களை அடிக்குறிப்புகளாகக் காட்டிச் செல்வார் பேராசிரியர் அல்-உமரி. அவற்றைத் தமிழ்ப் பதிப்பில் தவிர்த்துள்ளார்கள். இந்த நூலில் பொதிந்துள்ள விடயங்கள் குறித்து மேலும் விவரங்கள் திரட்டிக் கொள்ள விழைவோர் அரபு மூல நூலைக் கலந்து கொள்ளுமாறு வேண்டி கொள்ளப்படுகின்றனர். அண்மையில் வெளிவந்துள்ள பேராசிரியரின் السيرة النبوية الصحيحة நூலினுள் முன்னைய நூலின் இரண்டு பாகங்களும் அடங்கியுள்ளன.
அரபு மொழியில் வழங்கும் பெயர்கள் தமிழ் உச்சரிப்பின் போது சிதைந்து போய் விடாதிருக்கவென அவற்றை இயன்றளவு அரபு மூலத்திலேயே அடிக்குறிப்புகளாகத் தந்துள்ளோம்.
பத்து வருட கால இடைவெளியின் பின், பலரது வேண்டுகோளுக்கிணங்க இதன் மீள் பதிப்பு வெளியாகின்றது.
எமது முனைவுகள் மூலம் நன்மைகளே விளைய வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக…..
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.