இஸ்லாமும் போதைப்பொருள் ஒழிப்பும் – ஒரு சமூக உளவியல் ஆய்வு
கி.பி ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாத்தை தழுவிய ஆரம்ப கால அரபிகளுக்கு மத்தியில், மதீனா சமூகத்தில், மதுவுக்கு அடிமை யாதல் என்ற பிரச்சினையை தீர்த்து வைத்தல் என்ற விஷயத்தில், இஸ்லாத்தின் வெற்றிகரமான அடைவு குறித்து சில குறிப்புகளை தருவதனை இந்த ஆய்வு இலக்காக கொண்டுள்ளது.
மதுவுக்கு மிக மோசமாக அடிமையாகியிருந்த, அதனை பழக்க தோஷமாக ஆக்கிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் நடத்தையிலும் போக்கிலும் செயல்திறன் மிக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவிய மிக முக்கிய ஆன்மீக, சமூக, உளவியல் காரணிகளை வெளிப்படுத்த இங்கு முயட்சித்திருக்கிறது.
நவீன காலத்திலோ பழைய காலத்திலோ மனித இன வரலாற்றில் என்றும், எங்கும் காணாத அந்த தனித்துவமான நிகழ்விலிருந்து சில படிப்பினைகளை உங்களோடு இவ்வாய்வில் நான் கலந்துரையாடுகிறேன். அதுதான் மது அருந்துவதிலிருந்து கூட்டமாக, சமூகமாக தவிர்ந்து கொண்ட நிகழ்வாகும். இதன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் பரவிப்போயுள்ள மதுவுக்கு அடிமையாதல் என்ற பிரச்சினையை தீர்த்து வைப்பதிலும் மதுவுக்கு அடிமையானோருக்கு உதவுவதிலும் இஸ்லாத்தை சார்ந்தவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய சாத்தியப்பாடுகளையும் ஆற்றல்களையும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை அரபு மொழியில், பாரம்பரிய முறைமை சார்ந்த விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளில் பின்பற்றக்கூடிய மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.