இலகுவழி கணிதம் (விளக்கமும் பயிற்சியும்) | தரம் – 02
இலங்கையின் கல்விப்போக்கில் புதிய பாடத்திட்டமானது மாணவர்களின் தேர்ச்சி களை அடிப்படையாகக் கொண்ட கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தேர்ச்சிகளைக் கொண்டு மாணவர்கள் பாடசாலையிலும், வீட்டிலும் ஆசிரியரி னதும், பெற்றோரினதும் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது.
புத்தாக்கமுடைய எண்ணக்கருக்களை உள்வாங்கும் சிறந்த எதிர்கால நற்பிரஜை களை வெளிக்கொணரும் இன்றைய கல்வித் திட்டத்தின் அடிநாதமாக விளங்கும் கணித எண்ணக்கருக்களை சரியாக விளங்கிக் கொள்ள முடியாத நிலையில், மேல் வகுப்புக் களில் கற்றலை வெறுப்புடன் நோக்கும் மாணவர் சமூகத்தை வகுப்பறைகளில் காணமுடி கிறது. இதனை நிவர்த்திக்கும் வகையில் ஆரம்பக் கல்வியின் வகுப்பறைகளில் கணித பாடத்தை இலகுவாகவும், மாணவர்கள் சுயமாகவும் கற்றுக் கொள்ளும் வகையில் எம்மால் இப்பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டு உங்கள் கைகளில் நூலாகத் தவழ்கிறது.
இந்நூல் தரம் இரண்டு மாணவர்களின் கற்றல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு முழுப் பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சிகளை இந்நூலில் செய்வதற்கு ஏற்றவிதமா சுவும் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உதவியின்றி மாணவர்கள் சுயமாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இந்நூல் அமையும்
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.