பெளத்தமும் – இஸ்லாமும்
சமூக நல்லிணக்கமும் மனித நேயமும்
இலங்கையில் பௌத்த- முஸ்லிம் உறவுப் பாரம்பரியத்தை மீளவும் கட்டியெழுப்ப வேண்டியது அறிஞர்களதும் மதத் தலைவர்களதும் உண்மையான இலங்கையர்களதும் கடமையாகும். இந்த வகையில் பௌத்த- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்புகின்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலானது மனித நேயம் சமூக நல்லிணக்கம் என்ற கருப்பொருட்களை பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் கண்ணோட்டங்களில் அலசுவதற்கு முற்படு கிறது.
உண்மையில் மதங்களுக்கிடையிலான கலந்துரையாடலானது மிகவும் சிக்கலானதும் காலோசிதமானதும் ஆகும். பௌத்தமும்இஸ்லாமும் இருவேறுபட்ட மதங்களாக இருப்பினும், பொதுவான ஒரு தலைப்பூடாக இணைக்க முடியாத இரு வேறுபட்ட துருவங்களை இணைக்கும் ஒரு பணியை இந்நூல் நிறைவேற்றும் என உறுதியாக நம்புகின்றோம்.
உண்மையில் ஆய்வுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இரு மதங்களின் மூலாதார நூல்களின் அடிப்படையில் இந்நூல்தொகுக் கப்பட்டிருப்பது குறிப்பிட்டுக் கூற வேண்டிய அம்சமாகும். எவ்வித காய்தல் உவத்தல் இன்றி உள்ளதை உள்ளவாறே தொகுத்து வழங்கி யிருப்பது ஆய்வாளரக்ளின் நம்பிக்கையாகும்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.