இரண்டு வினாக்கள்
* அல்குர்ஆன் ஏன் பிடிக்கும்?
* அல்குர்ஆனில் ரொம்பப் பிடித்தது என்ன?
இரண்டு வினாக்களும் மேலோட்டமான பார்வையில் கிட்டத்தட்ட ஒன்று போன்று இருந்தாலும் முற்றிலும் வெவ்வேறான அர்த்தங்களைக் கொண்டவை. இரண்டு கேள்விகளுமே எமது வகுப்பறைகளில் சர்வ சாதாரணமாக உரையாடப்படும் கதையாடல்கள். அந்த இரண்டுக்கும் பொதுவாக என் மனதில் உதித்த சில விடைகளைத்தான் இங்கு தொகுத்திருக்கின்றேன். மற்றபடி இந்நூல் அல்குர்ஆனின் வரலாற்றைக் கூறும் அற்புத தொகுப்பாக்கமோ அல்லது, அல்குர்ஆனின் விளக்கவுரையோ அல்ல. நள்ளிரவுப் பொழுதில் கடகட சத்தத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் ஜன்னலோர புகையிரதத்தில் எதிரே அமர்ந்திருப்பவரோடு உரையாடும் தொனியில் தான் இந்த அத்தியாயங்களைத் தொகுத்திருக்கின்றேன். அல்லது, சிறு பசியுடன் இறுதிப் பாடவேளையில் கதை மட்டுமே கேட்கத் தயாராக இருக்கும் மாணவர்களுக்குச் சொல்வது போன்று இந்த பத்திகளை நானும் கூறியிருக்கின்றேன். அடர்த்தியான கருத்துச்செறிந்த கட்டுப் புத்தகங்களைப் புரட்டி குறிப்புக்கள் சேகரிக்காமல், தத்துவ காய்ச்சலில் உதிர்ந்த வித்துவக் கருத்துக்களைத் தொகுத்து அதற்கு மேல் எதுகை, மோனை இலக்கிய நடைகளை தெளிக்காமல்… என் மனது சொல்லித் தரும் எளிய விடயங்களை மாத்திரமே இங்கு தொகுத்துள்ளேன்.
ஆசிரியர்,
நபீல் அபாபீல்
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.