முஸ்லிம் சிந்தையின் நெருக்கடி
“இஸ்லாமிய சிந்தனை” என்ற கலைச்சொல் பொதுவானதொரு சொல்லாக்கமாகும். அதனைப் புரிந்து கொள்வதில் மனிதர்கள் பெரிதும் வேறுபடுகின்றனர். எனவேதான், அது கட்டுக்கோப்பாக வரையறுக்கப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம். அதற்கான முறைமை வரையப்பட வேண்டும்; விதிகள் வகுக்கப்பட வேண்டும்; கோட்பாடுகள் ஆதாரப்படுத்தப்பட வேண்டும். இந்த அனைத்திலிருந்தும் ஒரு முழுமையான ஒற்றைச் சிந்தனை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அந்தச் சிந்தனை இறுதியில் நமது அனைத்துக் கருதுகோள்களையும் ஒருமுகப்படுத்த வேண்டும். இதுவே நமது எதிர்பார்ப்பாகும். இப்பிரச்சினையைத் தெளிவுபடுத்தி, அதனைக் கையாளும் வழிகளை விளக்கும் வினைமை மிக்க பங்களிப்பாகவே இந்நூல் வெளிவருகிறது.
இஸ்லாமிய சிந்தனையின் பாரம்பரிய முறைமை பற்றிய கலந்துரை யாடலுடன் இந்நூல் ஆரம்பமாகிறது. அப்பாரம்பரிய முறைமை பற்றிய விமர்சனமும் மதிப்பீடும் அங்கு இடம்பெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய சிந்தனையின் முறைமையியலுக்கான அடிப்படைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி பேசப்படுகிறது. அதற் கான சட்டகம், மூலாதாரங்கள், பிரதான இயங்கு தளங்கள் என்பவை பற்றிய கலந்துரையாடலாக அது அமைகிறது.
அதனைத் தொடர்ந்து, இம்முறைமையியலின் முழுமைத்துவ நோக்கிலான ஆற்றுகை பற்றிய கலந்துரையாடலை நோக்கி நூல் நகர்கிறது. பின்னர் இஸ்லாமிய முறைமை பற்றியும் அறிவியற் கலைகள் பற்றியுமான பொதுவான கலந்துரையாடலுடன் அப்பகுதி நிறைவடைகிறது.
பின்னர், சமூக, மானிட, இஸ்லாமிய அறிவியற் கலைகள் தொடர்பான பிரச்சினைகளை ஆசிரியர் அலசுகிறார். அறிவையும், அறிவியல் நிறுவனங்களையும் இஸ்லாமிய மயப்படுத்துதல் என்ற கண்ணோக்கின் வழியாக மேற்குறித்த அறிவியற் கலைகளுக்கான விஷேட முன்னேற்பாடுகள் பற்றியும் முற்குறிப்புகள் பற்றியும் அங்கு உரையாடுகிறார்.
நூலின் இறுதியில் இரு விடயங்களை ஆசிரியர் கலந்துரையாடலுக்கு உட்படுத்துகிறார். ஒன்று: இஸ்லாமும் எதிர்காலமும். இரண்டு: மனித இனப் பயணத்தின் எதிர்காலம். தான் திருப்தி கண்ட நிலைப் பாடொன்று பற்றிய பிரகடனத்துடன் அப்பகுதியை அவர் நிறைவு செய்கிறார்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.