முன்பள்ளி மாணவர்களுக்கான
முன்மொழித்திறன் விருத்தி
முன்பிள்ளைபப்பருவக் கல்வி இன்று முன்னெப்போதும் இல்லாதாவாறு கல்வியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 03 முதல் 05 வரையான காலகட்டம் ஒரு பிள்ளையின் வாழ்வில் அவதிக்காலம் என கருதப்படுகிறது. இப்பருவத்தில் பிள்ளையின் மூளை கிட்டத்தட்ட 80% விருத்தியடைவதாக இனங்காணப்பட்டுள்ளது. இது தவிரவும் முன்பிள்ளைப் பருவத்தில் முறையான எண்ணக்கரு விருத்தி செய்யப்பட்டுச் சிறந்த அத்திவாரமிடப்படாமை பிள்ளையின் கல்வி எனும் நீண்டகாலப் பயணத்துக்குத் தடையாக இருப்பதும் அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் முன்பள்ளிப் பருவத்தில் பிள்ளைகள் முறையாகக் கையாளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றன.
முன்பிள்ளைப்பருவத்தில் வெவ்வேறு திறன்களும் இணைத்த செயற்பாடுகளின் மூலம் விருத்தி செய்யப்படுகின்றது. இத்திறன்கள் அனைத்தையும் செவ்வனே விருத்தி செய்வதற்கு மொழித்திறன் நன்கு விருத்தியடைந்திருத்தல் கட்டாய தேவையாகும். ஏனைய பாடங்களில் வரும் எண்ணக்கருக்களை சிறந்த முறையில் பிழையின்றி விருத்தி செய்து கொள்வதற்கும், தமக்கு தெரிந்தவற்றை வெளிப்படுத்துவதற்கும் மொழித்திறன் நன்கு விருத்தியடைந்திருத்தல் வேண்டும். ஒருவரின் சிந்தனை திறன் விருத்திக்கு அடிப்படையாக அமைவதும் மொழித்திறன் விருத்தியாகும்.
இம்முன்மொழி திறன் விருத்திக்கான சிறிய நூல் மேற்சொன்ன விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக மிகபக்குவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எம் எதிர்கால சந்ததியினரின் கல்வி எனும் வாழ்நாள் நீடித்த பயணத்துக்கு இந்நூல் சிறந்த அத்திவாரமிடும் என்பது எமது திடமான நம்பிக்கையாகும்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.