அரபு இலக்கிய நயம் | மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான தெரிவுப்பாடங்களில் அரபு இலக்கியநயம்:2016-ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரை அதிகமான மாணவர்களால் தெரிவுப் பாடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும், 2021-ம் ஆண்டு தொடக்கம் பொத (சா.தர) பரீட்சையின் அரபு இலக்கியநயப் பாடத்திற்கான வினாத்தாளின் கட்டமைப்பு மற்றும் அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட முன்னோடி மாதிரி விளாப்பத்திரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, அரபு இலக்கிய நயப் பாடத்தை பல மாணவர்கள் தெரிவுப் பாடமாகத் தெரிவு செய்வதற்குத் தயங்கினர். இதற்குப் பிரதான காரணம். கவிதை, உரைநடை போன்ற பகுதிகளிலிருந்து அரபு மொழியில் வினாக்கள் இடம்பெற்றிருந்தமையாகும். மட்டுமன்றி, சிலர் இப்பாடம் குறித்து மிகவும் பிழையான கருத்துக்களை மாணவர்களிடையே கூறியிருந்தமையும் ஒரு காரணமாகும். அரபு இலக்கிய நய விளாப் பத்திரம் முழுவதும் அரபு மொழியிலேயே எழுதப்படல் வேண்டும்; 200 சொற்களுக்குக் குறையாத வகையில் கட்டுரை எழுத வேண்டும் போன்ற பிழையான பல தகவல்களை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை அச்சமடையச் செய்து, இப்பாடத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
அந்தவகையில், அரபு இலக்கிய நய முன்னோடி வினாப் பத்திரத்தை மாதிரியாகச் கொண்டு ஐந்து மாதிரி வினாப் பத்திரங்களைத் தயார் செய்து அவற்றுக்கான விடைகளையும் வழங்கியுள்ளோம். சிறந்த முறையில் அவற்றைச் செய்து பார்ப்பது கூபொ.த சாதாரண தரப் பரீட்சையை இலகுவாக முகங்கொடுப்பதற்கு நிச்சயம் கைகொடுக்கும்.
மேலும், கவிதை, உரைநடை போன்ற பகுதிகளிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குவதன்மூலமும்திறமைசித்தியைப்பெற்றுக்கொள்ளலாம். அந்தவகையில், கவிதை மற்றும் உரைநடை ஆகிய இவ்விரு அலகுகளிலும் பரீட்சை வினாத்தாளில் எவ்வாறான வினாக்கள் அரபு மொழியில் இடம்பெறலாம் என்பதை ஊகித்து, அவ்வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் தொகுத்துத் தந்துள்ளோம். இவற்றில் சிறப்பாகப் பயிற்சி பெறுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.