கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை
பேரறிஞர் அஷ்ஷெய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்களின் “نحو تفسير موضوعي لسور القران الكريم” நூலின் தமிழாக்கத்தை வெளிக்கொணர் வதில் நாம் காண்பது அளவிறந்த மகிழ்வு. 2000 மாம் ஆண்டு இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளிவந்த வேளை ஆங்கிலம் வழங்கும் நாடுகளிலெல்லாம் அது பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்தவர் “Ashur A. Shamis”. அதனைச் செம்மை யாக்கம் செய்தவர் “Zaynab Alawiye”.
“نحو تفسير موضوعي لسور القران الكريم” நூலினை நேரடியாக அரபு மூலத்திலிருந்தே தமிழாக்கம் செய்து தந்துள்ளார் ஷெய்க் ஷாஹுல்ஹமீது (உமரி).
இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படுகின்றது தமிழ்ப் பதிப்பு. முதலாம் தொகுதி சூரா அல் பாத்திஹா முதல் 24 வது ஸுரா அந்நூர் வரையான விரிவுரையைக் கொண்டுள்ளது. இரண்டாம் தொகுதி 25 வது ஸூரா அல் புர்கான் முதல் இறுதி ஸூரா அந்நாஸ் வரையாக அமைந் துள்ளது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.