யதார்த்தங்கள்
யதார்த்தங்கள், பதினான்கு சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.திருமணம் கொடுக்கல் வாங்கல்களால் சீரழியும் குடும்பங்கள், மாமி, மருமகள் பிரச்சினை, சந்தேகக் கோடுகளால் ஏற்படும் சந்தோஷக் கேடு பிள்ளைகளின் குடும்ப வாழ்வில் பெற்றோரின் அநாவசிய தலையீடு, விதவை களுக்கு வாழ்வளித்தல், மறுமண ஊக்குவிப்பு, அன்பும் அடிமைத்துவம், சொத்துக்களை இலக்காகக் கொண்ட திருமணம், முறையற்ற தொடர்புகள் போன்றவையே பெரும்பாலான கதைகளில் கருக்களாயிருக்கின்றன.இத்தொகுப்பிலுள்ள கதைகளினூடாக, குடும்ப உறவைப் பேணுவது அவசியம், ஏமாற்றுக்காரர்களுக்கு பலியாகிவிடக் கூடாது, உரிய விடயங்கள் உரிய காலத்தில் நடைபெற வேண்டும் ஒவ்வொருவருக்கும் சுயபுத்தி தேவை சமயக் கல்வி சகலருக்கும் அவசியம். எதிலும் நிதானம் தேவை, பரஸ்பரம் நம்பிக்கையும் நட்பும் நிலவ வேண்டும். அன்புக்கு வயதில்லை, உண்மையான நேசமே உயர்வானது போன்ற பல்வேறு செய்திகள் வெளிப்படுகின்றன.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.