ஸுன்னாவை அணுகும் முறை-அடிப்படைகளும் நியமங்களும்
நீண்ட நெடுங் காலமாக ஸுன்னா கற்கை நெறியைக் கற்பித்து வந்துள்ள பேராசிரியர் கர்ளாவியின் ஆழ்ந்த புலமையும், அனுபவத் திரட்சியும் இந்த ஆக்கத்தில் துலக்கம் பெற்று விளங்குகின்றன. இலகுவான, யதார்த்தமான, சமநிலை பேணும் ஒன்றிணைந்த பரிபூரண நெறியாக ஸுன்னா அமைந்துள்ள தன்மையை தெளிவுறுத்திக் காட்டும் பேராசிரியரின் வாதங்கள் நுணுக்க மானவை, சிந்தனைக்கு விருந்தாய் அமைபவை.
ஷரீஆவின் மரபு ரீதியான அறிவினை சமகால முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களதும் பிரச்சினைக ளதும் மீதேற்றிக் காணும் அவரது முனைவுகள் காரணமாக சிந்தனைக் குழப் பங்களிலிருந்து நாம் இலகுவாகத் தெளிவு பெற்றுக்கொள்ள முடிகின்றது. ஹதீஸ்களின் பல்வேறுபட்ட விளக்கங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள சிந்தனைக் குழப்பங்கள், தவறாகக் கருத்துக் கொள்ளப்படுவதன் விளைவாக எழும் பாதகங்கள் முதலியன நன்கு தெளிவுறுத்தப்படுகின்றன. பலவீனமான ஹதீஸ்களின் தன்மைகள், அவற்றுக்கும் சட்டவியலுக்கும் இடையிலான தொடர்புகள், ஒழுக்கவியல் கற்பிதங்களின் போது அவை பெற்றுக்கொள்ளும் ஸ்தானம் என்பன நன்கு ஆராயப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.