اللغة العربية O/L Past Paper
இன்று முஸ்லிம் சமூகத்தின் பல தரப்பினர் மத்தியிலும் புனித அல்குர்ஆனின் மொழியாகிய அரபு மொழியின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும். முஸ்லிம்களின் ஆன்மிக, லௌகீக மொழியாக விளங்குகின்ற அரபு மொழி இன்று உலகின் முக்கிய சர்வதேச மொழிகளில் ஒன்றாகவும் கருதப் படுகின்றது.
எனவே, எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினர் மத்தியிலும் அரபு மொழியைப் பரப்புவதற்கான காத்திரமான முயற்சிகள் மென்மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர் மத்தியில் அரபு மொழிக் கல்வி சிறந்த முறையில் ஊக்குவிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
இந்த நோக்கில் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் க.பொ.த. (உ/த) வகுப்பு களில் அரபு மொழிப் பாடத்தைக்கற்கும் மாணவர் சமூகத்தின் நன்மை கருதி 2017 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் க.பொ.த, (உ/த) புதிய பாடத்திட்டத்தின் கீழ் முதற் தடவையாக “A/L Arabic Past Paper Book” ஒன்றைத் தயாரித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம் .
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.