நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
இஸ்லாமிய வரலாற்றிலும் சரி, உலக வரலாற்றிலும் சரி. உமர் பின் கத்தாப் (ரலி) என்ற பெயர் ஈடு இணையற்ற அளவுக்கு சிறப்பு பெற்றிருந்தது. இஸ்லாமிய சமுதாயத்திற்கு இரண்டாம் கலீஃபாவாக பதவியேற்ற பிறகு அவரது ஆட்சியில் இஸ்லாத்தின் விழுமியங்கள் ஒவ்வொன்றாக பறைசாற்றப்படத் தொடங்கின. இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் நாகரிகமற்ற அந்த சமூகத்தை நாகரிகத்தின் பக்கம் அழைத்து வந்தார் என்றால் கலீஃபா உமர் (ரலி) அவர்களோ அம்மக்களை நாகரிகத்தின் உச்சநிலைக்கு கொண்டு சென்றார் என்று வரலாறு சான்று பகர்கின்றது.
கலீஃபா உமர் (ரலி) அவர்களால் ஏற்பட்ட நாகரிகத்தின் முன்னேற்றத்தை உணர்த்தும் விதமாக ‘நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி) என்ற இந்நூல் அமைந்துள்ளது. நூலாசிரியர் மெளலவி நூஹ் மஹ்ழரி தக்க ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மாற்றுமத சகோதரர்களும் உமர்பின் கத்தாப் (ரலி) அவர்கள் எந்த முறைகளில் எந்தெந்த நாகரிகத்தின் தந்தையாகத் திகழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் சிறப்பாக எழுதியுள்ளார்கள். இதன் முதல்படியே உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றதும் மக்காவின் நிலையே தலைகீழாக மாறியது எனக்கூறலாம் .
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.