இஸ்லாம் – க.பொ.த.(உ/த) கடந்தகால வினா விடைகள் (2019-2023/24)
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இஸ்லாத்தை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள் புதிய பாடத்திட்ட ஒழுங்கில் சிறந்த புள்ளிகளைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் உயர்ந்த நோக்கில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தில் 50 பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் 100 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள சிறந்த வாய்ப்பு மாணவர்களுக்கு காணப்படுகிறது. எனினும், இது இலகுவான ஒரு காரியமல்ல. முழுப் பாடத்திட்டத்தையும் கருத்தில் கொண்டே இவ்வினாப் பத்திரம் தயாரிக்கப்படுகிறது. பாட அலகுகளில் உள்ளடக்கப்படும் முக்கிய நிகழ்வுகள், அறிஞர்கள், கலைகள், நூல்கள், குர்ஆன்-ஹதீஸ் வசனங்கள் மற்றும் வரலாறுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இவ்வினா பத்திரம் காணப்படுகிறது.
பாட அலகுகளிலுள்ள தகவல்களை ஆழமாகத் தெரிந்து கொள்ளாதோர் இவ்வினாப் பத்திரத்தில் குறைவான புள்ளிகளையே பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இரண்டாம் வினாப் பத்திரத்திற்கு எவ்வளவு சிறப்பாக விடையெழுதிய போதிலும் A, B சித்திகளைப் பெறுவது சாத்தியமற்றதாகி விடுகிறது. முதலாம் வினாப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும் 50 வினாக்களுக்கு 40 வினாக்களுக்கேனும் சரியான விடைகளை எழுதினால் உயர்ந்த தரத்தினை அடைவது சாத்தியப்படலாம்.
க.பொ.த. உயர்தரப் பாடத்திட்டத்தை கற்றுக் கொள்ள இரண்டு வருட கால அவகாசம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விடைப்பட்ட காலப் பிரிவில் மாணவர்கள் தமது பாடசாலைகளில் பல பரீட்சைகளுக்கு தோற்றுவர். இதன் மூலம் பொதுப் பரீட்சை ஒன்றுக்கு தோற்றுவதற்கான தகுதி அவர்களுக்குக் கிடைக்கப் பெறுகிறது.
மாணவர்கள் வாரத்துக்கு ஒரு பயிற்சியை செய்தால்கூட இரண்டு வருட காலப் பிரிவிற்குள் முழுப் புத்தகத்தையும் சிறப்பாகக் கற்று இவ்வினாப் பத்திரத்திற்கு விடை எழுதத் தம்மை தயார்படுத்திக் கொள்ள முடியுமென நம்புகிறோம்.
இந்நூல், கடந்த 05 வருட கால வினாப் பத்திரங்களையும் உள்ளடக்கி சில திருத்தங்களுடன் புதிதாக வெளியிடப்படுகிறது என்பதையும் கருத்திற் கொள்க.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.