புதிய மொழிப் பேழை | தரம் 3,4,5
- புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி
பாடசாலைகளில் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகள் வினைதிறன், விளைதிறன் கொண்டதாக அமைய வேண்டும். கற்றல் செயற்பாடுகள், கணிப்பீடு, மதிப்பீடு. உயர்ந்த மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாத போது குறித்த இலக்குகளும், நோக்கங்களும் அடையமுடியா எட்டாக் கணியாகவே காணப்படும். ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தில் கணிதம், தமிழ், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பிரதானமான பாடங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு மனிதனுக்கும் மொழியானது அத்தியவசியமான ஒரு விலாசமாக பிரதிபலிக்கக் கூடியது அந்த வகையில் ஆரம்பக் கல்வியை ஒரு விளைச்சல் நிலமாகக் கொண்டு நல்லமுறையில் பேணிவளர்த்து நல்ல விளைச்சலை எதிர்காலத்தில் பெற சுய கற்றல் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கிலும், ஆரம்பக் கல்வி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் பாட ரீதியான கணிப்பீடு, மதிப்பீடு உள்ளடக்கி “புதிய மொழிப் பேழை” ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி பாடநூல், கடந்த கால வினாத்தாள்களை தழுவி அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாமாகவே முன் வந்து விடையளிக்கக் கூடிய வகையில் மொழி விருத்தி, எழுத்து, வாசிப்பு, பேச்சு, கேட்டல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு “புதிய மொழிப் பேழை” புதிய பொழிவுடன் அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.