இஸ்லாமிய சட்டங்கள் நோன்பு
மத்ஹகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். ஸலாத் தும் ஸலாமும் இறைதூதர் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரைப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இஸ்லாமிய சட்டங்கள் – மத்ஹபுகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு நூல் வரிசையில் மூன்றாவது பாகம் அல்லாஹ்வின் அருளினால் வெளிவருகின்றது.சுத்தம், தொழுகை ஆகிய தலைப்புகளில் முதலிரு பாகங்கள் வெளிவந்தன. மூன்றாவது பாகம் நோன்பு என்ற தலைப்பில் அமைந்துள்ளது. நோன்பு தொடர்பாக பல நூல்கள் தமிழ் மொழியில் எழுதப் பட்டிருந்தாலும், அதன் தாத்பரியங்களையும் சட்டங்களையும் பல மத்ஹபுகளின் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து அல்குர் ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கும் நூல் இல்லாமை ஓர் அறிவியல் இடைவெளியாக இருந்து வந்துள்ளது. நோன்பின் சட்டங்கள் பற்றிய தெளிவின்மை அதில் பல தவறுகளை செய்வதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. பூரண தெளிவுடன் நோன்பு நோற்று அல்லாஹ்வின் திருப்தியை பெறுவது ஒவ்வொரு நோன்பாளியின் கடமையாகும். இந்த நூலில் வரும் நோன்போடு தொடர்பான ஒவ்வொரு சட்டப் பிரச்சினையும் அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் மற்றும் ஏனைய இமாம்களினது கருத்துக்களையும் கருத்திற் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. கருத்து முரண்பாடுகள் பெரும்பாலும் ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டு அவற்றுள் பலமான கருத்து ஆதாரங்களின் அடிப்படையில் எமக்கான இஜ்திஹாதாக முன்வைக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.