Back Cover
Look Inside

Islam A/L Past Paper Part 02

 இஸ்லாம் – கடந்தகால வினா விடைகள் (2012-2021)


  • பகுதி) 02
  • EX/PRESS/0021/0044
  • ISBN No.: 978-955-4699-85-4

LKR 1,200.00

In stock

SKU: Islam A/L Past Paper P-02 Categories: ,

இஸ்லாம் –  க.பொ.த.(உ/த) கடந்தகால வினா விடைகள் (2012-2021) | பகுதி – 2


க.பொ.த. உயர் தரத்தில் இஸ்லாத்தை ஒரு பாடமாகக் கற்று பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கடந்த கால வினாக்களையும் அவற்றுக்கு எதிர்பார்க்கப்படும் விடைகளின் அளவு, அமைப்பு என்பவற்றையும் சிறப்பாகப் புரிந்து கொண்ட நிலையில் பரீட்சைக்கு முகங்கொடுப்பது சிறந்த பெறுபேறுகளைப் பெற துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறான பெறுமதிமிக்க வினா விடை நூல்களை தாம் வெளியிட்டு வருகின்றோம்.

மாணவர்களது உள்ளங்களில் காணப்படுகின்ற பரீட்சை பற்றிய அச்சம் அல்லது மண்டபத்தில் உருவாகும் ஒரு வகை பதற்ற நிலை சிறந்த முறையில் வினாக்களுக்கு விடை எழுத முடியாத நிலைக்கு அவர்களை உட்படுத்துவதனால் பாடசாலைகளிலும் விஷேட வகுப்புக்களிலும் பலவேறு சிரமங்களுக்கு மத்தியில் நன்றாக பாட அலகுகளைக் கற்றுத் தேர்ந்த மாணவர்கள்கூட ஏமாற்றமான பெறுபேறுகளைப் பெற காரணமாகின்றது.

பாடசாலைக்கு முறையாகச் சென்று கற்றுக் கொள்ளாமை, பரீட்சைகளுக்குத் தோற்றாமை, விஷேட வகுப்புக்கள் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளாமை, paper class களில் கலந்து விடையெழுதிப் பழகாமை என்பன எமது மாணவர் மத்தியில் அவதானிக்கப்படும் மிகப் பெரிய குறைபாடுகளாகும்.

இந்நிலையில் A/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமது எதிர்கால முன்னேற்றம், நலன்களைக் கருத்திற் கொண்டு தான் பரீட்சைக்குத் தோற்றும் பாடங்களை ஆழமாகக் கற்றுக் கொள்வது அவசியமானதாகும். இதற்கு ஆசிரியர்களது வழிகாட்டல்களும் மேலதிக வாசிப்பும் பெரிதும் துணை நிற்கின்றது.

மாணவர்களது நலன் கருதி “நடைமுறைக்கேற்ற இஸ்லாம்” என்ற பெயரில் நான்கு பாகங்களாக நூல் வரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது. தஸவ்வுப், தஸ்கியா, தரிக்காக்கள் தொடர்பாக ஆழமாகப் படிப்பதற்கு “ஆன்மீக வாழ்வு” என்ற நூலை மாணவர்கள் படிக்கமுடியும்.

அல்குர்ஆன், ஹதீஸ் கலை, சட்டத்துறை, ஹதீஸ் துறை, இமாம்கள், சட்டத்துறை இமாம்கள் தொடர்பான பகுதிகளை ஆழமாகக் கற்க “நடைமுறைக்கேற்ற இஸ்லாம்” மூன்றாம் பாகம் பெரிதும் உதவுகிறது.

இவ்வாறு பாட அலகுகளில் இடம்பெற்றுள்ள தலைப்புக்களில் சிறந்த விளக்கங்களைப் பெறுவது மட்டும் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றுக்கு உதவுவதில்லை. கடந்த கால வினாக்கள் அவற்றுக்கான விடைகள், அவற்றுக்கு வழங்கப்படும் புள்ளிகள், நேர முகாமைத்துவம் போன்ற விடயங்களும் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.

இவ்விடயங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வழங்கப்படும் தகவல்களுடன் மேலதிக தகவல்களையும் இணைத்து “கடந்த கால வினா-விடை நூல்கள்” Readmore Publication இனால் வெளியிடப்பட்டு வருகின்றன.

மிகக் கிட்டிய காலத்தில் தலைப்புவாரியிலான வினா விடை நூலொன்றையும் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு இலகுபடுத்திக் கொடுக்க நாம் நாடியுள்ளோம்.

Weight 0.5 kg
Dimensions 28 × 20 × 1.5 cm
Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.