Ilahu-Vali-Kanihtam-G03
Ilahu-Vali-Kanihtam-G03
Back Cover
Look Inside

Ilahu Vali Kanidham | Grade 03

இலகுவழி கணிதம்| தரம் 03


  • Language : Tamil
  • First Edition : March 2019
  • Pages: 173 + ii
  • ISBN No: 978-624-5064-01-4
  • Publishers : ReadMore Publication, Colombo.
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 275.00

In stock

SKU: Ilahu Vali Kanidham | Grade 03 Categories: ,

இலகுவழி கணிதம் | தரம் 03


இந்நூல் 2018ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பாடத்திட்டம் தரம் 03 க்கான கணிதம், ஆசிரியர் வழிகாட்டி நூல், பாடநூல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கற்றல் என்பது மாற்றம், அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் இடமாக பாடசாலைகள் காணப்படுவது நாம் அறிந்ததே. குறிப்பாக, மாணவர்கள் கற்கின்ற பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை, கால மாற்றத்திற்கு ஏற்பவும், நவீன யுகத்திற்கேற்ற வகையிலும் மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. அந்த வகையில், இலங்கையிலும் கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும் குறிப்பாக, ஆரம்பக் கல்வித் தரங்களில் இப்பாரிய மாற்றம் அவசியமான ஒன்றாகும். இந்த மாற்றத்திற்கு ஏற்ப தகுதியான துணை நூல்களும் தயாரிக்கப்பட்டு அவை மாணவரின் சிறந்த உயர் அடைவுக்குத் துணையாக வேண்டும் என்பதே நமது அவா

அந்த வகையில், புதிய கலைத்திட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கான பாட நூல்கள் தயாரிக்கப்படுவதும், அதனைத் தொடர்ந்து துணை நூல்கள் தயாரிக்கப்படுவதும், அதனை மாணவர்கள் பெற்று, அதன் ஊடாக அறிவுப் புரட்சியினை ஏற்படுத்த முனைவதும் இயல்பான விடயங்கள். அண்மைய காலங்களில் இத்துறை பாரியளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றமை முக்கியமானதாகும். அட்டைக் கவர்ச்சி, பாடத்திட்டத்தைத் தாண்டிய வகையில் அளவுக்கதிகமான விடயங்கள் உட்புகுத்தப்பட்டிருத்தல், இத்துறை சாராதோாரினால் ஆரம்பக் கல்வி நூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்படுதல் போன்றவை காரணமாக திசைமாறிச் சென்றுள்ள ஆரம்பக் கல்விப்புலத்தினைப் பாதுகாத்து அதன் உண்மைத்தன்மையின் ஊடாக மாணவர்கள் சிறந்த அடைவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்நூல் ஆசிரியர் கைந்நூலோடும், பாடநூலோடும் இணைந்ததாக பயிற்சிகளுக்கு இணையாகவும் தயாரிக்கப்படுள்ளமை விசேட அம்சமாகும்.

 

Weight 0.35 kg
Dimensions 24 × 18 × 1 cm
Author

S.L. Mansoor

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.