நபிவழியைப் புரிந்துகொள்ளல் இடர்பாடுகளும் தீர்வுகளும்
அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் இடையிலான தொடர்பின் நுணுக்கமான வரையறையை ஆய்வுக்குட்படுத்துவதுதான் இந்த நூலின் பிரதான பணி.
பல்வேறு வரலாற்றுச் சூழல்களின் விளைவாக இத்தொடர்பு பற்றிய எமது அதிகமான புரிதல்கள் பல வடிவங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இது, பல புதிய அறிவனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது. சுன்னா பற்றிய எமது அறிவுக் கலைகளில் அதன் சுவடுகளை ஆழமாக விட்டுச் சென்றிருக்கின்றது. முந்தைய, பிந்தைய இமாம்களுக்கு மத்தியில் நிலவிய பல்வேறு கருத்து வேறுபாடுகளும் இதற்குத் துணை செய்திருக்கின்றன. அதாவது, சட்டவியல் மத்ஹபுகளும் சட்டக் கோட்பாட்டியல், இறையியல் சிந்தனைப் பள்ளிகளும் சுன்னாவின் சில வகைகள் தொடர்பில் தமக்கு மத்தியில் தனித்தனியான கருத்துக்களுக்கும் நிலைப்பாடுகளுக்கும் வந்திருக்கின்றன.
சுன்னா தொகுக்கப்பட்டதற்குப் பிறகு சுன்னாவில் திருக்குர்ஆனும் உள்ளடங்கியிருக்கிறது என்ற நியாயத்தைச் சொல்லிக் கொண்டு. மக்கள் திருக்குர்.ஆனை விட்டு விட்டு சுன்னாவின் பக்கம் சென்று விட்டார்கள். பின்னர் சுன்னாவையும் விட்டு விட்டு இஸ்லாமிய பிக்ஹின் பக்கம் சென்று விட்டார்கள், காரணம் இஸ்லாமிய பிக்ஹ், திருக்குர்ஆன், சுன்னா இரண்டையும் உள்ளடக்கியிருக்கிறது என்றார்கள். இந்த நூல், சுன்னாவையும் மரபார்ந்த அறிவுகளையும் சுமந்தவர்கள் மத்தியில் விவாதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவித்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.