அம்மு (பரீட்சை வழிகாட்டி) | தரம் – 03
- மாதிரி வினாத்தாள்கள் – 30
- தமிழ் – கணிதம் – சுற்றாடல் – ஆங்கிலம் – சிங்களம்
பாடசாலைகளில் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகள் வினைத்திறன், விளைதிறன் கொண்டதாக அமைய வேண்டும். கற்றல் செயற்பாடுகள், கணிப்பீடு, மதிப்பீடு, பயனுறுதி வாய்ந்த வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாதபோது குறித்த இலக்குகளும் நோக்கங்களும் அடைய முடியா எட்டாக்கனியாகவே காணப்படும். ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தில் கணிதம், தமிழ், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பிரதானமான பாடங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கல்வியை ஒரு விளைச்சல் நிலமாகவே ஒப்பிடுவார்கள். நல்ல முறையில் பேணி வளர்த்தாலே நல்ல விளைச்சலை எதிர்காலத்தில் பெற முடியும். அந்த வகையில் சுய கற்றல் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கிலும் ஆரம்பக் கல்வி மாணவர்களின் சுற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் பாட ரீதியான கணிப்பீடுகள் மற்றும் மதிப்பீடுகளை உள்ளடக்கி தவணை ரீதியாக “அம்மு தரம் – 03 (பரீட்சை வழிகாட்டி)”அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாமாகவே முன்வந்து விடையளிக்கக் கூடிய வகையிலும் தம்மைத் தாமே மதிப்பீடு செய்து கொள்ளும் வகையிலும். ஆசிரியர் மாணவனை மதிப்பீடு செய்து கொள்ளும் வகையிலும், பெற்றோர் தனது பிள்ளையை மதிப்பீடு செய்து கொள்ளும் வகையிலும் 05 பாடங்களிலும் அம்மு தரம் 03 (பரீட்சை வழிகாட்டி)” அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
“அனுபவங்களை அனுபவங்கள் வாயிலாக அனுபவிப்பதே கற்றல்”
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.