ஹாத்திம் தாயி (பாகம்-1)
இக்கதை பாரசீக தேசத்தின் பழம்பெரும். கதையாகும். இது கதைக்குள் கதையாகப் பின்னிப் பிணைந்து, நிறைவு பெறும் மாபெரும் கதைக் களஞ்சியமாகும். இதன் ஆசிரியர் யாரென்று உறுதிபடத் தெரியவில்லை. இக்கதையின் நாயகரான ஹாத்திம் என்பவரைப் பற்றித் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காவிடினும், அப்படியான ஒருவர் வாழ்ந்த தாகப் பரவலாக நம்பப்படுகிறது. அவர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற் றாண்டின் பிற்பகுதி என்றும்; வாழ்ந்த இடம் அரேபியத் தீபகற்பத்திலுள்ள யெமன் என்றும் சொல்லப்படுகிறது. அரபு நாட்டவர் பல்வேறு குலம், கோத்திரங்களாகப் பிரிந்திருந்தனர். அவற்றுள் ஒன்று ‘தாயி’ கோத்திரமாகும். எனவே, ஹாத்திமின் பெயரோடு அவரது கோத்திரப் பெயரும் சேர்ந்தே வழங்கப்பட்டு வருகிறது. ஹாத்திம் தாயி என்ற இந்தக் கதை உலகின் பல்வேறு மொழி களுக்கு பெயர்க்கப்பட்டுள்ளது; தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹாத்திம் தாயி-1 மாணவர்களின் மனதில் களங்கத்தை ஏற்படுத்தாத வகையில், மூலக் கதையிலிருந்து வடித்தெடுக்கப்பட்டதே இத்தொகுப்பு. பரோபகாரம், தயாள சிந்தை, பிறர் துன்பம் துடைத்தல், உண்மை யின் உயர்வு. தீமையின் விளைவு. விலங்குகளிடத்தில் அன்பு காட்டுதல். தர்மத்தின் சிறப்பு. நன்றியுணர்வு போன்ற அரிய பண்புகளை இக் கதைகள் போதிப்பனவாக இருக்கின்றன.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.