இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவரகளது காலத்தில் பெண் விடுதலை
நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் பற்றிய சமுகவியல் மற்றும் சட்டவியல் ரீதியான ஓர் ஆய்வு இந்நூலாகும்.
பெண்களின் தனிப்பட்ட மற்றும் பொதுவான வாழ்க்கைத்துறைகள் பற்றியும் அவர்களது சமூக தொடர்புகள், பல்வேறு விதமான தொழிற்பாடுகள் என்பன பற்றியும் குறிப்பிடுகின்ற எல்லா எழுத்தாக்கங்களையும் இதனுள் அடக்க நான் கவனம் எடுத்திருக்கிறேன். ஒரு சமுதாயத்தின் அல்லது சமூகத்தின் ஒழுங்கினை இஸ்லாமிய சட்டம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது அவ்வாறே தனி மனித வாழ்வினையும் அது கட்டுப்படுத்துகிறது.
சமூக செயற்பாடுகளுக்கும் அவற்றின் சட்டவியல் விளைவுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பினை அடிப்படையாக வைத்து நான் சமூகவியல் மற்றும் சட்டவியல் அம்சங்களை ஒன்றிணைத்துள்ளேன். இப்படி நான் முஸ்லிம் தனி மனிதர்களின் நடத்தையை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில் சமர்ப்பிக்க நாடினேன். சமூகவியல் ரீதியான ஆய்வொன்றைப் பொறுத்த மட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய இயல்பொன்று இருக்கிறது. அதாவது, ஆய்வுக்குரிய சமூகவியல் நிலைமை தொடர்பாகத் திட்டமாக வரையறுத்துக் கூறும் எழுத்தாக்கங்களுக்கும் மேற்கோள்களுக்கும் மாத்திரம் அது தன்னை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை மாறாக, ஊகத்துக்குரியனவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் விளக்கம் கொடுக்கக் கூடியனவுமான எழுத்தாக்கங்களையும் மேற்கோள்களையும் கூட அது சேர்த்துக்கொள்கிறது. வரலாற்று உண்மைகள் இவ்விரு வகையான எழுத்தாக்கங்கள் மேற்கோள்களையும் வைத்து நிறுவப்படுகின்றன என்ற உண்மையை இம்முறைமை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.